Tuesday, February 15, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/02/16/large/768080.jpgகோவையில் வாக்காளர்களுக்கு ‘ஹாட் பேக்’ விநியோகம்; அமைச்சர், அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: மாநில தேர்தல் ஆணையத்தில் அதிமுக மனு

சென்னை: கோவையில் வாக்காளர்களுக்கு திமுகவினர் ஹாட்பேக் விநியோகம் செய்வதாகவும், இதற்காக அமைச்சர் செந்தில்பாலாஜி மற்றும் கோவை மாவட்ட ஆட்சியர், காவல்ஆணையர் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கும்படி மாநில, தேர்தல் ஆணையத்தில் அதிமுக சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அதிமுக செய்தித்தொடர்பாளர் பாபு முருகவேல் அளித்துள்ள மனு: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவின் கோட்டையான கொங்கு மண்டலத்தை திமுக கைப்பற்றத் துடிக்கிறது. அதன் வெளிப்பாடாக பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ரவுடிகள், கூலிப்படைகளை அமைச்சரும் மாவட்ட பொறுப்பாளருமான செந்தில்பாலாஜி தலைமையில் பலரும்மாவட்டத்தில் பரவியுள்ளனர். அமைதியான கோயம்புத்தூரை போராட்ட களமாக மாற்ற நினைக்கும் அமைச்சர் மீதும் நடவடிக்கை எடுக்காத மாவட்ட ஆட்சித் தலைவர், காவல் ஆணையாளர் மீதும் நடவடிக்கை வேண்டும்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...