Thursday, February 17, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/02/18/large/768531.jpgஅரக்கோணம், வாலாஜா, ஆற்காடு நகராட்சிகளில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை துரிதப்படுத்த கோரிக்கை

அரக்கோணம், வாலாஜா, ஆற்காடு நகராட்சிகளில் மோசமான நிலையில் உள்ள அடிப்படை கட்டமைப்பு வசதிகளை துரிதப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

ஆங்கிலேயர்கள் ஆட்சிக் காலத்தில் தமிழகத்தில் ஏற்படுத்தப்பட்ட முதல் நகராட்சி என்ற பெருமை வாலாஜாவுக்கு உண்டு. கடந்த 1866-ம் ஆண்டு தொடங்கப்பட்ட நகராட்சி 1998-ம் ஆண்டு இரண்டாம் நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. அதன்பிறகு நகராட்சி பெரியளவில் வளர்ச்சி அடையாமல் முடங்கியுள்ளது. 24 வார்டுகளுடன் 26,790 வாக்காளர்கள் உள்ள நகராட்சியில் நிலவும் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும். இறைச்சி மார்க்கெட் தனியாக கட்ட வேண்டும், பேருந்து நிலையத்தில் உள்ள பழைய கட்டிடங்களை இடித்து விரிவாக்கம் செய்ய வேண்டும், நகராட்சி கழிவுநீர் நேரடியாக பாலாற்றில் கலப்பதால் பாதாள சாக்கடை திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை இங்கு பிரதானமாக உள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...