Thursday, February 17, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/02/18/large/768537.jpgஜோலார்பேட்டை: கிருஷ்ணர்- ராதை சிலைகள் மீது சூரிய ஒளி விழும் அதிசய நிகழ்வு

ஜோலார்பேட்டை: திருப்பத்துார் மாவட்டம் ஜோலார்பேட்டை பஜனை கோயில் தெருவில் ஸ்ரீகிருஷ்ணர் கோயில் உள்ளது. இக்கோயிலில் கடந்த 2 நாட்களுக்கு முன் பக்தர்கள் தரிசனத்துக்காக மூலவருக்கு அலங்காரம் செய்யப்பட்டது. அப்போது காலை 7 மணியவில் கிருஷ்ணர்-ராதை சிலை மீது சூரிய ஒளி விழுந்தது.

இந்நிலையில், அடுத்தடுத்த நாட்களிலும் தொடர்ந்து காலை 7 மணியளவில் சிறிது நேரம் கிருஷ்ணர்-ராதை சிலை மீது சூரிய ஒளி விழவே பக்தர்கள் மத்தியில் பரவசத்தை ஏற்படுத்தியது. தொடர்ந்து, கிருஷ்ணர் - ராதை சுவாமி சிலைகள் மீது சூரிய ஒளி விழுவதை அறிந்த சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த பக்தர்கள் இந்த அரிய நிகழ்வை காண அதிகளவில் கோயிலுக்கு திரண்டு சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...