Friday, March 18, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/03/19/large/779097.jpgவேளாண் பட்ஜெட் இன்று தாக்கல்; மார்ச் 24 வரை பேரவை கூட்டத் தொடர்: மு.அப்பாவு அறிவிப்பு

சென்னை: சட்டப்பேரவையில் வேளாண் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. வரும் 24-ம் தேதி வரை பேரவைக் கூட்டம் நடக்கும் என்று பேரவைத் தலைவர் மு.அப்பாவு தெரிவித்தார். தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது.

2022-23 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேரவையில் நேற்று தாக்கல் செய்தார். இதையடுத்து, பேரவைத் தலைவர் மு.அப்பாவு தலைமையில் அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடந்தது. இதில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பங்கேற்றனர். பட்ஜெட் மீதான விவாதத்தை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...