Friday, March 4, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/03/05/large/774021.jpgசென்னை மேயராக ஆர்.பிரியா பதவியேற்பு: துணை மேயராக மு.மகேஷ்குமார் போட்டியின்றி தேர்வு

சென்னை: சென்னை மாநகராட்சி மேயராக தேர்வு செய்யப்பட்ட ஆர்.பிரியா, நேற்று பதவி ஏற்றுக்கொண்டார். துணை மேயராக மு.மகேஷ்குமார் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

இந்தியாவிலேயே பழமையானது சென்னை மாநகராட்சி. இது 334 ஆண்டுகள் பாரம்பரியம் மிக்கது. கடந்த மாதம் நடந்து முடிந்த மாநகராட்சி தேர்தலில் 200 வார்டுகளுக்கான உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மொத்தம் உள்ள 200 வார்டுகளில் திமுக 153 இடங்களிலும், அதிமுக 15 இடங்களிலும், காங்கிரஸ் 13 இடங்களிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆகியவை தலா 4 இடங்களிலும், மதிமுக 2 இடங்களிலும், இந்திய கம்யூனிஸ்ட், பாஜக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், அமமுக ஆகியவை தலா 1 இடத்திலும், சுயேச்சைகள் 5 இடங்களிலும் வெற்றி பெற்றனர். இவர்கள் அனைவரும் கடந்த 2-ம் தேதி ரிப்பன் மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில் பதவியேற்றுக் கொண்டனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...