Friday, March 11, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/03/12/large/776426.jpgவிவசாய மின் இணைப்புக்கு லஞ்சம்: சென்னிமலையில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

ஈரோடு மாவட்டம் சென்னிமலை - அறச்சலூர் சாலையில் மின்வாரிய அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தில் தமிழக அரசின் இலவச மின்சார திட்டத்தின் கீழ், மின் இணைப்பு பெறுவதற்கு விண்ணப்பிக்கும் விவசாயிகளிடம் லஞ்சம் கேட்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக உயர் அதிகாரிகளிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இதையடுத்து சென்னிமலை பேருந்து நிலையம் அருகே ஐக்கிய விவசாயிகள் முன்னணி மற்றும் அனைத்து மக்கள் நல அமைப்புகள் சார்பில் நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடந்தது. மின் இணைப்புக்கு லஞ்சம் கேட்கும் அதிகாரிகளைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...