Wednesday, March 2, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/03/03/large/773362.jpgபட்ஜெட் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்க மார்ச் 5-ல் தமிழக அமைச்சரவை கூட்டம்

சென்னை: பட்ஜெட் அறிக்கைக்கு ஒப்புதல் அளிக்கும் வகையில், தமிழக அமைச்சரவைக் கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மார்ச் 5-ம் தேதி மாலை 5 மணிக்கு நடக்கிறது.

தமிழக அரசின் 2022-23 நிதியாண்டுக்கான பட்ஜெட், வரும் 18-ம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மறுநாள் வேளாண் துறைக்கான தனி பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட உள்ளது. முன்னதாக பட்ஜெட்டில் இடம் பெற வேண்டிய முக்கிய அம்சங்கள் குறித்து விவசாயிகள், வணிகர் சங்கங்கள், தொழில் பிரிவினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர்களுடன் துறை வாரியாக அமைச்சர்கள் கருத்துக்கேட்பு கூட்டங்களை நடத்தினர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...