Tuesday, May 10, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/05/11/large/798480.jpgமே 16-ல் சென்னை பல்கலை. பட்டமளிப்பு விழா: ஆளுநர் ரவி, முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பு

சென்னை: சென்னை பல்கலைக்கழகத்தின் 164-வது பட்டமளிப்பு விழா மே 16-ம் தேதி நடைபெற உள்ளது. இதில், ஆளுநர் ஆர்.என்.ரவியும், முதல்வர் மு.க.ஸ்டாலினும் கலந்துகொள்கின்றனர். இதுதொடர்பாக சென்னை பல்கலைக்கழக பதிவாளர் (பொறுப்பு) என்.மதிவாணன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

சென்னை பல்கலைக்கழகத்தின் 164-வது பட்டமளிப்பு விழா பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கில் மே 16-ம் தேதி காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது. இவ்விழாவில் பல்கலைக்கழக வேந்தரும், ஆளுநருமான ஆர்.என்.ரவி தலைமையேற்று விழா பேருரை ஆற்றுகிறார். முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று பட்டமளிப்பு விழா பேருரை ஆற்றுகிறார். பல்கலைக்கழக இணைவேந்தரும், உயர்கல்வித் துறை அமைச்சருமான கே.பொன்முடி வாழ்த்துரை வழங்குகிறார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...