
கல்பாக்கம்: வாயலூர் அரசு மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் மீது பெற்றோர் - ஆசிரியர் கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்ட ஊழல் புகார் மீது விசாரணை மேற்கொண்ட கல்வித்துறை அதிகாரிகள், இந்தப் புகாரின் அடிப்படையில் தலைமை ஆசிரியரை இடமாற்றம் செய்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் ஒன்றியம் வாயலூர் கிராமத்தில் அரசு மேல்நிலைப் பள்ளி அமைந்துள்ளது. இப்பள்ளியில், வாயலூர், ஆயப்பாக்கம் மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளியின் தலைமை ஆசிரியராக கடந்த 2018-ம் ஆண்டு முதல் ஹேமாவதி என்பவர் பணிபுரிந்து வந்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்