
சென்னை: புதிய சொத்துவரி தொடர்பான நோட்டீசை திங்கள்கிழமை முதல் வீடு வீடாக சென்று அளிக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
தமிழகம் முழுவதும் சொத்துவரியை உயர்த்தி தமிழக அரசு கடந்த மாதம் அறிவிப்பு வெளியிட்டது. அதன்படி நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் இந்த சொத்துவரி உயர்வை அமல்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்தன. சொத்துவரி உயர்வு தொடர்பான அறிவிப்பை வெளியிட்டு பொதுமக்களிடம் கருத்து கேட்கும் பணி நடைபெற்றது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்