Sunday, June 19, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/06/20/large/815835.jpgசென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் மழை | சமூக வலைதளங்களில் படங்களை பகிர்ந்த நெட்டிசன்கள்

சென்னை: தமிழகத்தின் தலைநகர் சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் மழை பொழிந்து வருகிறது. அது குறித்த தகவலை ட்விட்டர் தளத்தில் பகிர்ந்து ட்ரெண்ட் செய்துள்ளனர் நெட்டிசன்கள்.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக அடுத்து வரும் நாட்களுக்கு மழை பொழிவு இருக்கலாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இதன் காரணமாக 19-ஆம் தேதி தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும். ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் லேசான அல்லது மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் சொல்லப்பட்டிருந்தது. அதன்படி தற்போது சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஒரு சில இடங்களில் மழை பதிவாகி உள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...