Tuesday, June 21, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/06/21/large/816666.jpg'அடுத்த 60 ஆண்டுகளுக்குள் மண்வளம் முற்றிலும் அழிந்துவிடும்' - 'மண் காப்போம்' விழாவில் ராஜ்நாத் சிங் கருத்து

கோவை: மண்வளத்தை பாதுகாக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி உலக நாடுகள் முழுவதும் 30,000 ஆயிரம் கிலோ மீட்டர் மோட்டர் சைக்கிளில் பயணம் செய்து செவ்வாய்க்கிழமை தமிழகம் திருப்பிய சத்குரு ஜக்கி வாசுதேவுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

கடந்த மார்ச் 21-ம் தேதி லண்டனில் இருந்து 30,000 கி.மீ மோட்டார் சைக்கிள் பயணத்தை தொடங்கிய சத்குரு இதுவரை 650-க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார். சர்வதேச அளவில் தாக்கம் ஏற்படுத்தியுள்ள சத்குருவின் 'மண் காப்போம்' இயக்கத்திற்கு உலக அளவில் 320 கோடி பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். இதுவரை 74 நாடுகள் இவ்வியக்கத்திற்கு ஆதரவு அளித்துள்ளன.

மேலும் இந்தியாவில் 8 மாநிலங்கள் தங்கள் மாநிலங்களில் மண் வளத்தை மீட்டெடுப்பதற்காக இவ்வியக்கத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளன. சத்தியமங்களத்தில் அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்ட பிறகு, கோவை வந்த சத்குரு சூலூர் விமானப் படை தளத்தில் நடைபெற்ற ‘மண் காப்போம்’ இயக்க நிகழ்ச்சியில் பங்கேற்றார். இந்நிகழ்ச்சியில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் காணொளி வாயிலாக கலந்துகொண்டார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...