
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் குற்றச்சாட்டு குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது.
அண்ணாமலை அறிவுப்பூர்வமாக குற்றச்சாட்டு வைப்பார் என நினைத்தேன். ஆனால், ஆதாரம் இல்லாமல் பேசுகிறார். டெண்டர் ஓபன் செய்வதற்கு முன்பே அதில் முறைகேடு நடந்துள்ளது என யூகங்களின் அடிப்படையில் பேசுகிறார். முறைகேடு நடந்து இருந்தால் அதை அவர் நிரூபிக்க வேண்டும். இல்லை என்றால் அவர் மற்ற துறைகள் மீது கூறிவரும் குற்றச்சாட்டுகளும் பொய் என்பது அனைவருக்கும் தெரிந்துவிடும்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்