Monday, June 20, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/06/20/large/816279.jpgகோவை: காவல் நிலையத்திலிருந்து இளைஞர் தப்பியோட்டம் - பிடிக்க முயன்றபோது காவலருக்கு காயம்

கோவை: கோவையில் காவல் நிலையத்தில் இருந்து வெளியே தப்பியோடிய இளைஞரை காவல்துறையினர் பிடித்து கைது செய்தனர். அவரை பிடிக்க முயன்ற போது காவலருக்கு காயம் ஏற்பட்டது.

கோவை சீரநாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் ஜீவா(22). இவர், சில தினங்களுக்கு முன்னர், தனது சகோதரர் மற்றும் நண்பர்களுடன் அமர்ந்து பிறந்தநாள் விழாவை கொண்டாடினார். அப்போது அவர்களுக்குள் திடீரென தகராறு ஏற்பட்டது. இதில் ஜீவா தனது சகோதரருடன் சேர்ந்து சுரேஷ்குமாரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில், காயமடைந்த சுரேஷ்குமார் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் அளித்த புகாரின்பேரில் கோவை ஆர்.எஸ்.புரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...