Sunday, June 12, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/06/13/large/813227.jpgதிமுக எல்லை மீறுகிறது: பாஜக துணைத் தலைவர் குற்றச்சாட்டு

சென்னை: திமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழில் மதுரை ஆதீனம் தொடர்பான செய்தி வெளியானது. இதற்குப் பதில் அளித்து தமிழக பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி வெளியிட்ட அறிக்கை:

மதுரை ஆதீனத்தை மீண்டும் மிரட்டியுள்ளது திமுக. அக்கட்சி எல்லை மீறி செல்கிறது. பாஜகவின் பொறுமைக்கும் எல்லை உண்டு.இந்து கடவுள்கள், நம்பிக்கைகளை அவதூறு செய்வோரை தண்டிக்காமல், கிரிமினல் குற்றங்களில் ஈடுபடுவோரை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறது. சட்டத்தைப் பாதுகாக்க வேண்டிய அமைச்சர்கள், வன்முறையைத் தூண்டும் வகையில் பேசுகின்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...