Friday, July 1, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/07/02/large/820981.jpgகரூரில் இன்று நடைபெறும் விழாவில் 80,750 பேருக்கு ரூ.500 கோடியில் நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார் ஸ்டாலின்

கரூர்: கரூர் திருமாநிலையூரில் இன்று (ஜூலை 2) நடைபெறும் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று 80,750 பேருக்கு ரூ.500.83 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி, ரூ.518.44 கோடியில் 99 பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, ரூ.28.60 கோடியில் முடிவுற்ற 95 பணிகளை திறந்து வைக்கிறார். நாளை நாமக்கல்லில் நடைபெறும் உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாட்டிலும் முதல்வர் பங்கேற்க உள்ளார்.

கரூர் திருமாநிலையூரில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. விழாவில், முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று 80,750 பயனாளிகளுக்கு ரூ.500.83 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். மேலும்,ரூ.518.44 கோடியில் 99 பணிகளுக்குஅடிக்கல் நாட்டி, ரூ.28.60 கோடியில் முடிவுற்ற 95 பணிகளை திறந்து வைத்துப் பேசுகிறார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...