Friday, July 1, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/07/02/large/821014.jpgதொழில் புரிய ஏதுவான மாநிலங்களில் தமிழகத்துக்கு 3-வது இடம் - முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: தொழில் புரிய ஏதுவான மாநிலங்களுக்கான தரவரிசையில் தமிழகம் 3-வது இடத்தை பெற்றதற்காக தொழில்துறை அமைச்சர், அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட ட்விட்டர் பதிவில், ‘‘தொழில் புரிய ஏதுவான மாநிலங்களுக்கான தரவரிசையில் சிறப்பாக செயல்படும் மாநிலங்களுள் தமிழகம் இடம்பெற்றுள்ளது. புள்ளிகள் அடிப்படையில் பார்த்தால் 14-வது இடத்தில் இருந்து 3-வது இடத்துக்கு தாவியுள்ளோம். தொடர்ச்சியான, திட்டமிட்ட நடவடிக்கைகளால் முதலீடுகளுக்கான முக்கிய மையமாக தமிழகத்தை உயர்த்தியுள்ள தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கும், துறை அதிகாரிகளுக்கும் எனது பாராட் டுக்கள்’’ என தெரிவித்துள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...