Wednesday, July 20, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/07/20/large/829053.jpgதமிழகத்தில் 2ம் உலகப் போரில் சிதைந்த ரயில் பாதை மீண்டும் அமைகிறது - திட்ட அறிக்கைக்காக நிதி ஒதுக்கீடு

புதுடெல்லி: இரண்டாம் உலகப் போரின்போது சிதிலமடைந்த ஜோலார்பேட்டை-கிருஷ்ணகிரி-ஒசூர் ரயில் பாதை மீண்டும் அமையவுள்ளது. கிருஷ்ணகிரி மக்களவை தொகுதியின் காங்கிரஸ் எம்.பி செல்லக்குமார் முயற்சியால் இந்த ரயில் பாதை அமைவதற்கான விரிவானத் திட்ட அறிக்கைக்காக ரயில்வே ரூ.2.45 கோடி ஒதுக்கி உள்ளது.

இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முன்னர் 1942 வரை, ஜோலார்பேட்டையிலிருந்து கிருஷ்ணகிரிக்கு சென்றவர ரயில் பாதை செயல்பாட்டில் இருந்துள்ளது. இரண்டாம் உலக யுத்தம் 1942ல் நடைபெற்ற போது, அந்த ரயில்பாதையின் தண்டவாளங்கள் அகற்றப்பட்டன. இதன்பிறகு சுமார் 75 ஆண்டுகளாக ஜோலார்பேட்டையிலிருந்து கிருஷ்ணகிரி மார்கமாக ஓசூருக்கான ரயில் திட்டம் வெறும் கனவாகவே இருந்து வருகிறது. இதன் மீது ஒவ்வொரு தேர்தலிலும் அளிக்கப்பட்டவை வெறும் வாக்குறுதியாகவே தொடர்ந்துள்ளன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...