Friday, July 8, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/07/09/large/824067.jpgமுன்னாள் அமைச்சர் காமராஜ் வீடு உட்பட52 இடங்களில் லஞ்ச ஒழிப்பு சோதனை - மகன்கள், உறவினர் உட்பட 6 பேர் மீது வழக்கு பதிவு

மன்னார்குடி / சென்னை: வருமானத்துக்கு அதிகமாக ரூ.58.44 கோடிக்கு சொத்து சேர்த்ததாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ், அவரது மகன்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக காமராஜ் மற்றும் அவர் தொடர்புடைய 52 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் நேற்று ஒரே நேரத்தில் சோதனை நடத்தினர்.

கடந்த அதிமுக ஆட்சியில் உணவுத் துறை அமைச்சராக இருந்தவர் ஆர்.காமராஜ். தற்போது திருவாரூர் மாவட்ட அதிமுக செயலாளராகவும், நன்னிலம் தொகுதி எம்எல்ஏவாகவும் உள்ளார். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி வடக்கு வீதியில் உள்ள அவரது வீட்டுக்கு நேற்று காலை டிஎஸ்பி சத்தியசீலன் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீஸார் வந்தனர். அப்போது வீட்டில் காமராஜ் இருந்தார். அவரிடம், சொத்துக் குவிப்பு வழக்கு தொடர்பாக சோதனை நடத்த வந்துள்ளதாக தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து காலை 6 மணி அளவில் போலீஸார் சோதனையை தொடங்கினர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...