
சென்னை: “மத்திய அரசும், தமிழ்நாடு அரசும் நேரடியாகத் தலையிட்டு, சட்டவிரோதமாக செயல்படும் தனியார் நிதி நிறுவனங்களையும், கடன் செயலிகளையும் தடை செய்ய வேண்டும். கடன் செயலிகள் எங்கும் தரவிறக்கம் செய்ய முடியாதபடி இணைய சேவை வழங்குநர் வழியே முடக்க வேண்டும்” என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''இந்திய அரசின் பண மதிப்பிழப்பு நடவடிக்கை, ஜிஎஸ்டி வரித் தாக்குதல் போன்றவை ஏற்படுத்திய மிகப்பெரும் பாதிப்புகளிலிருந்து மீள்வதற்கு முன்பாகவே, கரோனா பொதுமுடக்கம் ஏற்படுத்திய பெருந்தாக்கம் பல குடும்பங்களை வாழ்வாதாரமின்றி நிலை குலைய வைத்துவிட்டது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்