Sunday, August 14, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/08/15/large/840532.jpgசிறப்பான சேவை, புலன் விசாரணைக்காக 15 காவல் அதிகாரிகளுக்கு முதல்வரின் பதக்கங்கள்: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: தமிழக காவல் துறையில் 15 அதிகாரிகளுக்கு சிறந்த பொதுசேவைக்கான முதல்வரின்பதக்கம், புலன் விசாரணைக்கான சிறப்பு பணி பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து தமிழக அரசுநேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு. மக்கள் சேவையில் தன்னலம் கருதாமல் சிறப்பாக செயல்பட்ட 5 காவல் துறை அதிகாரிகளின் சீரிய பணியை பாராட்டி சுதந்திர தினத்தை முன்னிட்டு சிறந்த பொது சேவைக்கான தமிழக முதல்வரின் காவல் பதக்கம் வழங்கப்படுகிறது. அதன்படி, சென்னை பெருநகர காவல் சட்டம் - ஒழுங்கு (தெற்கு) கூடுதல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா, கடலூர் தனிப் பிரிவு குற்றப் புலனாய்வு ஆய்வாளர் க.அம்பேத்கர், சென்னை பெருநகர காவல் அடையாறு போக்குவரத்து காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் சு.சிவராமன், மதுரை மதிச்சியம் போக்குவரத்து காவல் நிலைய சிறப்புஉதவி ஆய்வாளர் வை.பழனியாண்டி, தாம்பரம் காவல் ஆணையரக செம்மஞ்சேரி போக்குவரத்து காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் மா.குமார் ஆகியோருக்கு இந்த பதக்கம் வழங்கப்படுகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...