Sunday, August 7, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/08/08/large/836988.jpg4-ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு: கருணாநிதி நினைவிடத்தில் ஸ்டாலின் அஞ்சலி - அமைதிப் பேரணியில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

சென்னை: முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 4-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி அவரது நினைவிடத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். முன்னதாக, முதல்வர் தலைமையில் நடந்த அமைதிப் பேரணியில் அமைச்சர்கள், திமுகநிர்வாகிகள் உள்ளிட்ட பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

திமுக தலைவராக 50 ஆண்டுகளுக்கும்மேல் பணியாற்றியவரும், 5 முறை தமிழக முதல்வராக பதவி வகித்தவருமான கருணாநிதி, கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்ட் 7-ம் தேதி உடல்நலக்குறைவால் காலமானார். அவரது உடல், மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிட வளாகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. கடந்த 2019-ல் அவரது முதலாம் ஆண்டு நினைவுதினம் அனுசரிக்கப்பட்டது. அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் அமைதிப் பேரணியாக சென்று, கருணாநிதி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர். அதன்பின், 2 ஆண்டுகள் கரோனா காரணமாக அமைதிப் பேரணி ரத்து செய்யப்பட்டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...