
சென்னை: காரைக்குடி அழகப்பா, நெல்லை மனோன்மணியம் சுந்தரனார், வேலூர் திருவள்ளுவர் ஆகிய 3 பல்கலைக்கழகங்களுக்கு புதிய துணைவேந்தர்களை நியமனம் செய்து ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவிட்டுள்ளார்.
காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தராக இருந்த ராஜேந்திரனின் பதவிக்காலம் 2021-ம் ஆண்டு ஜூன் 4-ம் தேதி நிறைவடைந்தது. இதனால், துணைவேந்தரின் பணிகளை மேற்கொள்ள உயர்கல்வித் துறை செயலர் தலைமையில் பொறுப்புக்குழு அமைக்கப்பட்டது. புதிய துணைவேந்தரை தேர்வுசெய்ய விசாகப்பட்டினம் சட்டப் பல்கலை. முன்னாள் துணைவேந்தர் சத்யநாராயணா தலைமையில் தேடுதல் குழுவும் அமைக்கப்பட்டது. இந்தக் குழு தகுதியான 3 பேரை தேர்வு செய்து அப்போதைய ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு பரிந்துரை செய்தது. அந்த 3 நபர்களையும் நிராகரித்த ஆளுநர், தேடுதல் குழுவை கலைத்து உத்தரவிட்டார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்