
சென்னை: தமிழகம் முழுவதும் 50 ஆயிரம் இடங்களில் இன்று (செப்.11) 36-வது மெகா கரோனா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.
இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்று பரவலைத் தடுக்கும் வகையில், தற்போது 12 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்படுகிறது. அதேபோல, 2 தவணை தடுப்பூசி போட்டு 6 மாதம் நிறைவடைந்தவர்களுக்கு பூஸ்டர் தவணை தடுப்பூசி போடப்படுகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்