Sunday, September 4, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/09/05/large/861274.jpg‘புதுமைப்பெண்’ திட்டம் இன்று தொடக்கம்: முதல்வர் ஸ்டாலின், டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் பங்கேற்பு

சென்னை: அரசுப் பள்ளிகளில் படித்து பட்டப்படிப்பு உள்ளிட்ட உயர்கல்வியில் சேரும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் ‘புதுமைப்பெண்’ திட்டத்தை சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார். விழாவில், டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் பங்கேற்று, 25 தகைசால் பள்ளிகள், 15 மாதிரிப் பள்ளிகளை திறந்து வைக்கிறார்.

ஏழைப் பெண்களின் திருமணத்துக்கு தாலிக்கு தங்கம் மற்றும் நிதியுதவி வழங்கும் வகையில், தமிழக அரசின் சார்பில் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் திருமண உதவித் திட்டம் செயல்படுத்தப்பட்டு வந்தது. சமீபத்தில் இத்திட்டம் மூவலூர் ராமாமிர்தம் உயர்கல்வி உதவித் திட்டமாக மாற்றப்பட்டது. இத்திட்டத்தின்படி, 6 முதல் 12-ம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் படித்து உயர்கல்விக்கு செல்லும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இத்திட்டத்துக்காக ரூ.698 கோடியை ஒதுக்கியதுடன், வழிகாட்டுதல்களும் சமீபத்தில் வெளியிடப்பட்டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...