Tuesday, September 6, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/09/06/large/861982.jpgதிமுக அரசு கோவை மாவட்டத்தை புறக்கணிக்காமல் திட்டப்பணிகளை மேற்கொள்ள வேண்டும்: எஸ்.பி.வேலுமணி வலியுறுத்தல்

கோவை: கோவை மாவட்டத்தை புறக்கணிக்காமல் திமுக அரசு திட்டப்பணிகளை மேற்கொள்ள வேண்டும் என முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.

தமிழக சட்டப்பேரவை உறுப்பினர்கள் அனைவரும், தங்களது சட்டப்பேரவைத் தொகுதியில் நிலவும் முக்கியப் பிரச்சினைகள் குறித்த மனுவினை அந்தந்த மாவட்ட ஆட்சியர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என முதல்வர் அறிவித்தார். கோவை மாவட்டத்தில் 10 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. முதல்வரின் அறிவிப்பைத் தொடர்ந்து கோவை தெற்கு தொகுதி பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் கடந்த வாரம் தனது தொகுதி பிரச்சினைகள் தொடர்பான கோரிக்கை மனுவை மாவட்ட ஆட்சியரிடம் அளித்தார். இந்நிலையில், மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளைச் சேர்ந்த அதிமுக எம்.எல்.ஏக்கள் செ.தாமோதரன், ஏ.கே.செல்வராஜ், பொள்ளாச்சி ஜெயராமன், அம்மன் அர்ச்சுணன், பி.ஆர்.ஜி.அருண்குமார், கந்தசாமி, கே.ஆர்.ஜெயராம், அமுல்கந்தசாமி ஆகியோர் முன்னாள் அமைச்சரும், அதிமுக கொறடாவுமான எஸ்.பி.வேலுமணி தலைமையில் செவ்வாய்க்கிழமை (செப்.6) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்தனர். மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரனை சந்தித்து எம்.எல்.ஏக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை தனித்தனியாக அளித்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...