Monday, September 19, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/09/20/large/870449.jpgமின் கட்டணத்தை குறைக்க வேண்டும்: செந்தில் பாலாஜியிடம் தொழில்துறையினர் நேரில் வலியுறுத்தல்

தமிழகத்தில் தொழில்நிறுவனங் களுக்கு உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தை குறைக்க வேண்டும் என, சென்னையில் மின்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜியை தொழில்துறையினர் நேற்று நேரில் சந்தித்து வலியுறுத்தினர்.

கோவை மாவட்ட சிறு தொழில்கள் சங்கத்தின் (கொடிசியா) தலைவர் திருஞானம், முன்னாள் தலைவர்கள் ரமேஷ்பாபு, ராமமூர்த்தி, தமிழ்நாடு ஓபன் எண்ட் நூற்பாலைகள் சங்கத்தின் தலைவர் அருள்மொழி, தமிழ்நாடு சிறு, குறு தொழில் நிறுவனங்கள் சங்கத்தின் தலைவர் மாரியப்பன், பல்லடம் ஜவுளித் தொழில் முனைவோர் சங்கத்தின் தலைமை ஆலோசகர் முருகேசன் உள்ளிட்டோர் அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் மின் கட்டண உயர்வால் தொழில்துறையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி குறித்து முறையிட்டனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...