Wednesday, September 21, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/09/21/large/871229.jpgஆ.ராசா மீது நடவடிக்கை எடுக்காமல் பாஜக மாவட்டத் தலைவரை கைது செய்வதா? - வானதி சீனிவாசன்

கோவை: திமுக துணைப் பொதுச்செயலாளரும், எம்.பி.யுமான ஆ.ராசா மீது நடவடிக்கை எடுக்காமல் பாஜக கோவை மாநகர் மாவட்டத் தலைவர் உத்தமராசாமியை கைது செய்துள்ளது கண்டிக்கத்தக்கது என பாஜக தேசிய மகளிரணி தலைவரும், எம்எல்ஏவுமான வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், "மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் பேசிய, ஆ.ராசாவை கைது செய்யாமல், பெயரளவுக்குக்கூட கண்டனம் தெரிவிக்காமல், அதற்கு எதிர்வினையாற்றிய பாஜக மாநகர் மாவட்டத் தலைவரை கைது செய்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது. ஜனநாயகத்தின் மீது துளியும் நம்பிக்கை இல்லாத, பாசிச அரசு என்பதை இதன் மூலம் மீண்டும் ஒருமுறை திமுக நிரூபித்திருக்கிறது. திமுகவினர் வாயை திறந்தாலே, ஜனநாயகம் பேச்சுரிமை, கருத்து சுதந்திரம் பற்றி வகுப்பெடுப்பார்கள். ஆனால், திமுக ஆட்சிக்கு வந்த பிறகு எதிர்கருத்து சொன்னாலே கைது செய்து, அச்சுறுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...