Wednesday, October 12, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/10/13/large/882124.jpgமெட்ரோ சுரங்க பணி: முதல்வர் இன்று தொடங்கி வைக்கிறார்

சென்னை: இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில், மாதவரம் பால்பண்ணை அருகே சுரங்கம் தோண்டும் பணியை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார். சென்னையில், இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம், ரூ.63,246 கோடி செலவில் நடைபெறுகிறது. இந்தப் பணிகளை2026-ம் ஆண்டுக்குள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, பல்வேறுஇடங்களில் சுரங்கப்பாதை, உயர்மட்டப் பாதைக்கான பணிகள் தீவிரமாக நடைபெறுகின்றன.

அதிலும், சுரங்கப்பாதைப்பணிக்காக, மொத்தம் 23 சுரங்கம் துளையிடும் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. இதுவரை 5 சுரங்கம் துளையிடும் இயந்திரங்கள் வந்துள்ளன. இந்நிலையில், மாதவரம் பால்பண்ணை அருகில் சுரங்கம்தோண்டும் பணியை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கிவைக்கிறார். இதையடுத்து, மெட்ரோ ரயில் பாதைக்கு முதல்சுரங்கம் துளையிடும் இயந்திரத்தின் பணி தொடங்குகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...