
சென்னை: தமிழகம் முழுவதும் தீபாவளி பண்டிகையன்று பட்டாசு வெடித்த விபத்துகளில் காயமடைந்து அரசு மருத்துவமனைகளில் 179 பேர் உள்நோயாளிகளாகவும், 345 பேர் புற நோயாளிகளாகவும் சிகிச்சைப் பெற்றுள்ளதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுதுறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
சென்னையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுதுறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று தீபாவளி பண்டிகையன்று நிகழ்ந்த பட்டாசு விபத்துகளால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியது: " தீபாவளியன்று பட்டாசு வெடித்த விபத்துகளில் காயமடைந்து ஸ்டான்லி மருத்துவமனையில் 11 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த 11 பேரில், திருவண்ணாமலை, பண்ருட்டி, விழுப்புரம் போன்ற பகுதிகளில் கைகளில் காயம் ஏற்பட்டு, விரல்கள் துண்டிக்கப்பட்ட நிலையில் கூட இவர்கள் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்