Saturday, October 15, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/10/16/large/883666.jpgகாவிரி டெல்டா மாவட்ட கொள்முதல் நிலையங்களில் நெல் ஈரப்பதம் குறித்து மத்தியக் குழு ஆய்வு

தஞ்சாவூர்/திருவாரூர்: காவிரி டெல்டா மாவட்டங்களில் செயல்படும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல்லின் ஈரப்பதம் குறித்து மத்தியக் குழுவினர் நேற்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, தொடர்ந்து மழை பெய்து வருவதால் நெல்லின் ஈரப்பதத்தில் 22 சதவீதம் வரை தளர்வு அளிக்க வேண்டும் என்று மத்தியக் குழுவினரிடம், விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

டெல்டா மாவட்டங்களின் வேளாண் பாசனத்துக்காக, மேட்டூர் அணையில் இருந்து நடப்பாண்டு முன்கூட்டியே தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால், குறுவை அறுவடையும் முன்கூட்டியே தொடங்கியது. இதையடுத்து, செப். 1-ம் தேதி முதல் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு, 17 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல் கொள்முதல் செய்யப்படுகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...