
சென்னை: சென்னையில் மழை நீர் வடிகால் பணிகளை வரும் நாட்களில் முதல்வர் மற்றும் தலைமைச் செயலாளர் ஆய்வு செய்ய உள்ளனர்.
சென்னையில் மாநகராட்சி சார்பில் மழை நீர் வடிகால் அமைத்தல் மற்றும் கால்வாய்களை தூர்வாருதல், நீர்வளத்துறை மற்றும் பொதுப்பணித்துறை சார்பில் பக்கிங்காம் கால்வாய்களை தூர்வாரும், மாநகராட்சி சார்பில் ஓட்டேரி கால்வாய், மாம்பலம் கால்வாய் ஆகியவற்றில் தூர் வாரும் பணிகள் நடைபெற்று வருகின்றன. வடகிழக்கு பருவமழை இந்த மாதம் 15 ஆம் தேதிக்கு பிறகு தொடங்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கு முன்பாக பணிகளை முடிக்க வேண்டும் என்பதால் இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.வை
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்