Saturday, October 8, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/10/09/large/880361.jpgதிமுக தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்வு; துரைமுருகன், டி.ஆர்.பாலுவும் போட்டியின்றி தேர்வு

சென்னை: திமுக பொதுக்குழுக் கூட்டம் சென்னையில் இன்று (அக்.9) நடைபெற்றது. இதில் கட்சித் தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டார். மேலும், பொதுச் செயலாளராக துரைமுருகன், பொருளாளராக டி.ஆர்.பாலு ஆகியோரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.

திமுகவின் 15-வது உட்கட்சிப் பொதுத்தேர்தல் நடைபெற்று வருகிறது. ஏற்கெனவே ஒன்றியம், நகரம், நகரியம், பேரூர், பகுதி, மாவட்டம், மாநகரச் செயலாளர்கள், நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் நடைபெற்று, நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டுவிட்டனர். திமுக தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர் மற்றும் 4 தணிக்கைக் குழு உறுப்பினர் பதவிகளுக்குப் போட்டியிடுவோரிடம் நேற்று முன்தினம் அண்ணா அறிவாலயத்தில் விருப்ப மனுக்கள் பெறப்பட்டன. திமுக தலைவர் பதவிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் 2-வது முறையாக வேட்புமனு தாக்கல் செய்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...