
மதுரை: “தமிழகத்தில் அக்டோபர் 11-ல் திருமவாளவன் நடத்தும் மனித சங்கிலிக்கு அனுமதி வழங்கினால், விடுதலைப் புலிகளை ஆதரித்ததற்காக 1991ல் திமுக ஆட்சி கலைக்கப்பட்டபோது போல் இப்போதும் நடைபெறும்” என பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா எச்சரித்துள்ளார்.
இது குறித்து இன்று அவர் செய்தியாளர்களிடம் கூறியது: "நாடு முழுவதும் பிஎஃப்ஐ மற்றும் அதனுடன் தொடர்புடைய இயக்கங்களும் தடை செய்யப்பட்டுள்ளன. இந்த இயக்கத்துக்கு ஆதரவாக பேசுவதும், செயல்படுவதும் சட்டப்படி குற்றமாகும். தமிழகத்தில் அக்.11-ல் திருமாவளவன், சீமானும் நடத்தவுள்ள மனித சங்கிலிக்கு தமிழக அரசு அனுமதி வழங்கக் கூடாது. விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு அளித்ததால் 1991-ல் திமுக ஆட்சி கலைக்கப்பட்டதை தமிழக முதல்வருக்கு நினைவூட்ட விரும்புகிறேன். மனித சங்கிலிக்கு அனுமதி வழங்கினால் 1991-ல் நடந்தது இப்போதும் நடைபெறும். திருமாவளவனும், சீமானும் கைது செய்யப்பட வேண்டும்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்