Tuesday, October 4, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/10/05/large/878697.jpg'தமிழகத்தில் மாநகராட்சி முதல்  ஒன்றியங்கள் வரை வளர்ச்சிப் பணிகள் முடங்கிக் கிடக்கிறது' - இபிஎஸ்

சேலம்: "கோவையில் சுமார் ரூ.48 கோடியில், 133 பணிகளுக்கு, ஒப்பந்தங்கள் கோரப்பட்டு கிட்டத்தட்ட 11 முறை தள்ளிவைத்துள்ளனர். அதற்கு காரணம் கமிசன் அதிகமாக கேட்பதால், பணிகளை எடுக்க யாரும் முன்வரவில்லை. அதேபோல், தமிழகம் முழுவதும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஒன்றியம், கிராமங்கள் வரை வளர்ச்சிப் பணிகள் எல்லாம் முடங்கிக் கிடக்கிறது" என்று அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

சேலத்தில் அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம், மழைக்காலம் தொடங்கியுள்ள சூழலில், தமிழக அரசின் பணிகள் எவ்வாறு இருக்கிறது என்று கேள்வி எழுப்பப்டட்து. அதற்கு பதிலளித்த அவர், "இந்த ஆட்சி அமைந்ததில் இருந்து தற்போது வரை மெத்தனப்போக்குடன்தான் செயல்பட்டு வருகிறது என்பது அனைவருக்குமே தெரியும். அதிமுக ஆட்சிக்காலத்தில் கொண்டு வரப்பட்ட பணிகளைத்தான் இன்றைக்கு ஆட்சியாளர்கள் திறந்து வைத்துக் கொண்டுள்ளனர். திமுக அரசு அமைந்தபிறகு, ஏதாவது ஒரு பெரிய திட்டத்தை அறிவித்து, அதற்கான பணிகள் நடைபெறுகிறது என்றால் அப்படி எதுவும் இல்லை.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...