Thursday, October 6, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/10/07/large/879556.jpgதமிழகத்தில் ஒருபோதும் இந்தியை திணிக்க முடியாது: சென்னை ஆர்ப்பாட்டத்தில் வைகோ உறுதி

சென்னை: தமிழகத்தில் இந்தியை ஒருபோதும் திணிக்க முடியாது என்று மதிமுக பொது செயலாளர் வைகோ உறுதியாக தெரிவித்துள்ளார். சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் மதிமுக சார்பில் இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மதிமுகபொதுச் செயலாளர் வைகோ தலைமை தாங்கினார். தலைமை நிலைய செயலாளர் துரை வைகோ முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

ஆர்ப்பாட்டத்தில், வைகோ பேசியதாவது: இந்தி, சமஸ்கிருதத்தை திணிக்க முயற்சிக்கிறார்கள். அது ஒரு போதும் நடக்காது. முதல்வர் மு.க.ஸ்டாலின்தலைமையில் நடைபெறக்கூடிய திராவிட மாடல் ஆட்சிஇடம்கொடுக்காது. நாங்கள் பக்க பலமாக இருப்போம். இந்தி, சமஸ்கிருத கனவை மறந்து விடுங்கள். துப்பாக்கி குண்டுகளுக்கே அஞ்சாமல் போராடி இந்தியை எதிர்த்து வந்து இருக்கிறோம்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...