Thursday, October 13, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/10/14/large/882663.jpgவெளிநாட்டில் அதிக சம்பளத்தில் வேலை எனக்கூறி ஆசையை தூண்டி வலை விரிக்கும் தனியார் நிறுவனங்கள்: கவனமாக இருக்க டிஜிபி சைலேந்திரபாபு அறிவுரை

சென்னை: வெளிநாட்டில் அதிக சம்பளத்துடன் வேலை வாங்கித் தருவதாக ஆசையைத் தூண்டி பல போலி நிறுவனங்கள் வலை விரித்து வருகின்றன. எனவே, பொதுமக்கள் உஷாராக இருக்க வேண்டும் என டிஜிபி சைலேந்திரபாபு எச்சரித்துள்ளார். ஏழ்மை நிலையில் உள்ளவர்கள், குடும்பத்தை முன்னேற்றத் துடிப்பவர்கள், வாழ்க்கையில் எப்படியாவது முன்னேறி விட நினைப்பவர்கள், விரைவில் பணம் சம்பாதிக்கும் ஆசை கொண்டவர்கள் ஆகியோர் வெளிநாடு செல்ல அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.

இந்த ஆர்வத்தைப் புரிந்துகொள்ளும் சில தனியார் நிறுவனங்கள் மற்றும் முகவர்கள் வெளிநாடுகளில் அதிக சம்பளத்தில் வேலை இருப்பதாகவும், குறிப்பிட்ட நாட்களுக்குள் பணத்தை ஏற்பாடு செய்து கொடுத்துவிட்டால் உடனடியாக வெளி நாடுகளில் வேலை வாங்கித் தருவதாகவும் ஆசையைத் தூண்டுகின்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...