Friday, October 7, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/10/08/large/880043.jpgஏசி கம்ப்ரசர் வெடித்த விபத்தில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற இருவர் உயிரிழப்பு: பரங்கிமலை போலீஸார் தீவிர விசாரணை

ஆலந்தூர்: சென்னையில் உள்ள ஜாஸ் சினிமாஸ் அலுவலகத்தில், ஏசி பழுது பார்க்கும் பணியிலிருந்தபோது ஏசி வெடித்ததில், 2 பேர் உயிரிழந்தனர். மேலும் ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சென்னை, கிண்டி, அம்பேத்கர் நகரில், ஜாஸ் சினிமாஸ் என்ற தனியார் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. கடந்த 30-ம் தேதி, இந்நிறுவனத்தின், 3-வது தளத்தில் உள்ள ஏசி இயந்திரம் ஒன்று பழுதடைந்தது. இதனை சரி செய்ய, சென்னை, ஜாபர்கான்பேட்டை பாரத் ஏசி சர்வீஸ் சென்டரை சேர்ந்த, 3 ஊழியர்கள் சென்றனர்.

பழுதை ௮வர்கள் பார்த்து கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக திடீரென ஏசி கம்ப்ரசர் வெடித்து சிதறியதில், சூளைமேடு பகுதியை சேர்ந்த, சின்னதுரை(50), மதுரவாயலை சேர்ந்த இந்திரகுமார்(22), கோடம்பாக்கத்தை சேர்ந்த சரவணன் (41) ஆகிய மூவரும் 60 சதவீதம் தீக்காயமடைந்தனர். இதில், இந்திரகுமார், சின்னதுரை இருவரும் நேற்று, கேஎம்சி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக பரங்கிமலை போலீஸார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...