
சென்னை: அமெரிக்காவின் ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகம், ஐரோப்பிய வெளியீட்டாளர் எல்ஸ்வயர் இணைந்து வெளியிட்ட, உலகின் உச்சபட்ச 2 சதவீத விஞ்ஞானிகளின் பட்டியலில் பதஞ்சலி நிறுவனர் ஆச்சாரிய பாலகிருஷ்ணா இடம் பெற்றுள்ளார்.
இதுகுறித்து பதஞ்சலி யோகபீடம் அறக்கட்டளை வெளியிட்டசெய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: அமெரிக்காவின் ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஜான் பிஏ லோன்னிடிஸ் குழுவினர் ஐரோப்பாவின் எல்ஸ்வயர் நிறுவனத்துடன் இணைந்து உலகின் டாப் 2சதவீத விஞ்ஞானிகளின் பட்டியலை (https://ift.tt/C64DoGW) வெளியிட்டுள்ளனர். அதில் பதஞ்சலி நிறுவனர் ஆச்சாரிய பாலகிருஷ்ணாவின் பெயர் இடம்பெற்றுள்ளது. இது ஆயுர்வேதம் மற்றும் யோகா பற்றிய அறிவியல் ஆராய்ச்சிக்கு உலக அளவில் கிடைத்த அங்கீகாரமாகும்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்