Thursday, November 24, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/11/25/large/903182.jpgசென்னை மாநகராட்சி கவுன்சிலர் நாஞ்சில் ஈஸ்வர பிரசாத் காலமானார்: முதல்வர் ஸ்டாலின், கே.எஸ்.அழகிரி இரங்கல்

சென்னை: சென்னை மாநகராட்சி காங்கிரஸ் கவுன்சிலர் நாஞ்சில் ஈஸ்வர பிரசாத், உடல்நலக் குறைவால் காலமானார். அவரது மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

தென்சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவரும், ஆலந்தூர் 165-வது வார்டு கவுன்சிலருமான நாஞ்சில் ஈஸ்வர பிரசாத் (56), உடல்நலக் குறைவால் நேற்று அதிகாலை காலமானார். அவருக்கு சுதா என்ற மனைவியும், காவியா, அனன்யா என்ற 2 மகள்களும் உள்ளனர். நாஞ்சில் ஈஸ்வர பிரசாத்தின் உடல் ஆதம்பாக்கம் நியூ காலனியில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...