
கோவை: சேலம் ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், கோவை வழியாக இயக்கப்படும் 10 எக்ஸ்பிரஸ் ரயில்கள் வரும் 3ம் தேதி ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக சேலம் கோட்ட ரயில்வே அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: சேலம் ரயில்நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், வரும் டிசம்பர் 3-ம் தேதி கோவையிலிருந்து காலை 6.15 மணிக்கு சென்னை சென்ட்ரல் புறப்பட்டுச் செல்லும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் (எண்:12680), சென்னையிலிருந்து மதியம் 2.30 மணிக்கு கோவை புறப்பட்டு வரும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் (எண்:12679) ஆகியவை முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்