
மயிலாடுதுறை: ஜெயலலிதாவின் உண்மையான தொண்டர்கள் ஒன்றிணைந்து, தேசிய கட்சியுடன் கூட்டணி அமைத்தால்தான், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவை வெல்ல முடியும் என அமமுக பொதுச் செயலாளர் தினகரன் தெரிவித்தார்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அமமுக பொதுச் செயலாளர் தினகரன் நேற்று பார்வையிட்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார். பின்னர், கொள்ளிடம் வேட்டங்குடியில் அவர், செய்தியாளர்களிடம் கூறியதாவது: அதிமுக தற்போது செயல்படாத கட்சியாக உள்ளது. இதற்கு காரணம் பழனிசாமிதான். அவர் எங்களுக்கும், ஓ.பன்னீர்செல்வத்துக்கும் மட்டுமில்லாமல் ஜெயலலிதாவுக்கும் துரோகம் செய்துள்ளார். பழனிசாமி வீழ்ந்தால்தான் அதிமுகவுக்கும், தமிழகத்துக்கும் நல்லது என்றார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்