Monday, November 28, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/11/29/large/907162.jpgசென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் பொறியாளருக்கு வெற்றிகரமாக இதய மாற்று சிகிச்சை

சென்னை: புதுக்கோட்டையைச் சேர்ந்த பொறியாளர் குமார் (50). துபாயில் பணியாற்றி வருகிறார். பல ஆண்டுகளாக கட்டுப்படுத்த முடியாத சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருந்த அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. அங்குள்ள மருத்துவமனையில் பரிசோதனை செய்ததில், அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டிருந்தது தெரியவந்தது. அதற்காக, அவருக்கு ஸ்டெண்ட் பொருத்தப்பட்டது. அதன் பின்னரும் நெஞ்சு வலியால் அடிக்கடி அவதிப்பட்டு வந்தார்.

துபாயில் இருந்து தமிழகம் திரும்பிய அவர், சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில், அவருக்கு இதய ரத்தக் குழாய்களில் அதிகப்படியான அடைப்புகள் இருந்ததும், இதயம் மிகவும்பலவீனமடைந்திருந்ததும் தெரியவந்தது. இதய மாற்று அறுவை சிகிச்சை செய்தால் மட்டுமே உயிர்பிழைக்க முடியும் என்பதை மருத்துவர்கள் தெரிவித்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...