
கோவை: கோவையில் கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள 6 பேரை காவலில் எடுத்து விசாரிக்க என்ஐஏ அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
கோவை கோட்டை ஈஸ்வரன் கோயில் முன்பு கடந்த அக்டோபர் 23-ம் தேதி நடைபெற்ற கார் வெடிப்பு சம்பவத்தில் ஜமேஷா முபின் என்பவர் உயிரிழந்தார். இந்த சம்பவத்தை தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. இதுவரை முகமது தல்கா, அசாருதீன், நவாஸ் இஸ்மாயில், ரியாஸ், பிரோஸ் இஸ்மாயில், அப்சர்கான் ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்