
சென்னை: ஆதிதிராவிடர் பள்ளிகளுக்கு மேஜையுடன் கூடிய இருக்கைகள், இரும்பு அலமாரிகள் வாங்க ரூ.8.38 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஆதிதிராவிடர் நலத் துறை செயலர் தென்காசி ஜவஹர் வெளியிட்ட அரசாணை: ஆதிதிராவிடர் நலத் துறையின் கீழ் இயங்கும் 305 பள்ளிகளின் தரத்தை உயர்த்தும் வகையில், அந்த பள்ளிகளுக்கு மேஜைகளுடன் கூடிய இருக்கைகள், தேவையான இரும்பு அலமாரிகள் வழங்கப்படும் என்று சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்