
சென்னை: வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த மாண்டஸ் புயல் இன்று அதிகாலை 3 மணியளவில் முற்றிலுமாக கரையைக் கடந்தது. புயல் கரையைக் கடந்தாலும் கடல் சீற்றத்துடனேயே காணப்படுகிறது. இதனால் உள் மாவட்டங்களில் இன்னும் இரு தினங்களுக்கு மழை தொடரும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
மாண்டஸ் புயல் தற்போது வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து வருகிறது இன்று மதியம் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புயல் காரணமாக காஞ்சிபுரத்தில் 18 செ.மீ. மழை, குன்றத்தூரில் 15 செ.மீ மழை மற்றும் உத்திரமேரூரில் 14 செ.மீ மழை பதிவாகியுள்ளது. மின்னல், பணப்பாக்கத்தில் 20 செ.மீ. மழை பதிவானது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்