Sunday, December 11, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/12/12/large/913071.jpgதெற்கு அந்தமான் கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் கூறியதாவது. தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நாளை (டிச. 13) வளிமண்டல சுழற்சி உருவாக வாய்ப்பு உள்ளது. இது வரும் நாட்களில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

வட தமிழகத்தின் உள் மாவட்டங்களின் மேல் தற்போது நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகம், புதுச்சேரி மாநிலங்களில் டிச. 12-ம் தேதி (இன்று) பெரும்பாலான இடங்களிலும், வரும் 13, 14-ம் தேதிகளில் சில இடங்களிலும், வரும் 15-ம் தேதி ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...