
சென்னை: பொது விநியோகத் திட்டத்துக்கு பொருட்கள் வழங்கிய 5 நிறுவனங்கள் சுமார் ரூ.300 கோடி வரை வருவாயை மறைத்து, வரி ஏய்ப்பில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.
தமிழகத்தில் பொது விநியோகத் திட்டத்துக்கு எண்ணெய், பருப்பு உள்ளிட்ட உணவுப் பொருட்களை விநியோகம் செய்ய சில நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிறுவனங்கள் வரி ஏய்ப்பில் ஈடுபடுவதாக வருமான வரித் துறை புலனாய்வு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, கடந்த நவ.23-ம் தேதி சம்பந்தப்பட்ட நிறுவனங்களில் திடீர் சோதனை நடத்தினர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்