
சென்னை: மின் வாரிய ஊழியர்களுக்கு 2019 டிசம்பர் முதல் வழங்க வேண்டிய ஊதிய உயர்வை விரைந்து வழங்கக் கோரி, ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்தனர். ஆனால், போராட்டத்துக்கு நீதிமன்றம் தடை விதித்தது.
இதுதொடர்பாக தொழிற்சங்கங்களுடன் நடத்திய பேச்சுவார்த்தையில், 5 சதவீதம் வரை ஊதிய உயர்வு வழங்க மின் வாரியம் ஒப்புக் கொண்டது. மேலும், ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 34 சதவீதத்தில் இருந்து 38 சதவீதமாக உயர்த்தியுள்ளது. பொங்கல் பரிசாக ஓய்வூதியர்களுக்கு ரூ.500 வழங்கவும் மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்