Tuesday, January 10, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/01/11/large/927811.jpgசட்டப்பேரவை நிகழ்வு தொடர்பாக சட்ட நிபுணர்களுடன் ஆளுநர் ஆலோசனை

சென்னை: சட்டப்பேரவையில் நடைபெற்ற நிகழ்வு தொடர்பாக ஆளுநர் ஆர்.என்.ரவி, சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

தமிழக சட்டப்பேரவையின் நடப்பாண்டு முதல் கூட்டம், ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் நேற்று முன்தினம் தொடங்கியது. அப்போது, அரசால் தயாரித்து அளிக்கப்பட்ட உரையில், சில பகுதியை தவிர்த்துவிட்டு ஆளுநர் உரையை வாசித்தார். இதையடுத்து, ஆளுநர் உரையின் தமிழாக்கத்தை பேரவைத் தலைவர் மு.அப்பாவு வாசித்தார். அவர் வாசித்து முடித்ததும் எழுந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் தனது உரையை முழுமையாகப் படிக்காததற்கு வருத்தம் தெரிவித்ததுடன், அரசால் அச்சடித்து வழங்கப்பட்ட தமிழ், ஆங்கில உரைகள் மட்டும் பேரவை குறிப்பில் இடம்பெறும். இவை தவிர்த்து ஆளுநர் பேசியது இடம்பெறாது என்ற தீர்மானத்தை கொண்டுவந்தார். இந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...